Sunday, December 12, 2010

மௌனம்

என் தடித்த வார்த்தைகள் 
உன்னை கிழிப்பதற்குள் 
செய்து கொள்ளும்
தற்கொலை












Tuesday, November 9, 2010

மனம்

வண்ணங்கள் பலகொண்டாய் ,
வானவில் படைத்தாய்,
சிறகுகள் படைத்தாய்,
கனவுகள் தந்தாய்,
எத்தனையோ கொடுத்தும்,
எதுவும் போதாதென்ற
மனத்தை
எதற்கு தந்தாய் ?

மாற்றம்

ஏனோ நானும் மாறினேன் …
எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள்
என்னைச் சுற்றி நிகழ ,
ஏனோ நானும் மாறினேன்
நித்தம் புதுமை காணும் மனிதனாய் ,
சிந்தனைகளைத் தொலைத்து
புன்னகையில் புதைந்தவனாய் ….
ஆனால்
மெல்ல விடைபெறும் கணங்களில் ,
என் உள்ளத் தனிமை உருத்திட ….
ஆழக்கடலின் அமைதியில் ஒருவனாய்,
நீலவானில் வெண்மையில் ஒருதுளியாய் ,
கதிரவனில்லா காரிருளில் ஒருபகுதியாய்,
எல்லையில்லா என் பயணத்தைத் தொடர்கிறேன்
மீண்டும் தனியாய் ….
நடை பழகும் குழந்தையாய் …

Friday, October 15, 2010

மரணம்

உன்னைப் புதைத்த அதே 
குழியருகில்...
என்னைப் புதைத்திடும் கணம் 
ஏனோ வலிக்கிறது
இத்தனைநாள் 
நல்லவனாய் இருந்து,
என்ன சாதித்தாய் 
என நீ சிந்தும் புன்னகையில் ......



 
 

Sunday, September 12, 2010

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்

எண்ணற்ற எண்ணங்கள் எப்போதும் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கக்கூடிய கணங்கள் அதிகம் . சில எண்ணங்கள் நம்மை விட்டுப் பிரிந்திடாதவையாக இருந்திடும் ..
என்னை அதிகம் பாதித்தது மகாத்மா காந்தியின் மரணமும் ,காமராஜரின் தோழ்வியும், ஜெயகாந்தனின் எழுத்துகளும் ..
நாடு பெற்றிட்ட சுதந்திர இன்பத்தை முழுதுமாய் அனுபவிப்பதற்குள் பிரிந்தது காந்தியின் உயிர் , நல்லாட்சி என்றால் என்னவென்று முழுதாய் அறிவதற்குள் வந்தமைந்தது காமராஜரின் தோழ்வி.
இவ்விரண்டு நிகழ்வுகளும் நிகழ்ந்த காலம் வேறாயினும் இவற்றால் இந்திய வரலாறே மாறிப்போயிற்று. தெரிந்த நிகழ்வுகளில் புதிதாய் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும்  நினைவுட்டாலே என் நோக்கம் .
சுதந்திர இந்தியா, இதை முழங்கிடுவதற்குள், பிரிந்த உயிர்கள் அதிகம் , இங்கிலாந்தை எதிர்த்தும் , இருந்திட்ட சகோதரர்களைக் கொன்றும் ...
இரண்டிலும் காந்தி தனிப்பங்கு வகித்தார்.. சுதந்திரத்திற்காகவும் , சகோதர உயிர்கள் பிரியக்கூடாதெனவும் பெரும் போராட்டம் நடத்தினார் .
ஆனால் எல்லாவற்றிற்கும் முடிவுரையாய் வந்தமைந்தது அவர் மரணம்.
சுதந்திரம் பெற்றிட தலைமை தாங்கியவரை , சுதந்திரம் பெரும் வேளையில், சில சுயநலனுக்காக மதியாமல் நடந்தது , இந்த தேசம் செய்த முதல் பாவம், செய்திட்ட பாவத்திற்கு தண்டனையென அனுபவிக்கும் வலிதான் இன்றைய மதக்கலவரங்களிலும் ,ஜாதிக்கலவரங்களிலும் பலியாகும் உயிர்கள் ..
அவர் பேச்சினைக் கேட்காமல் நடந்திட்ட நிலையை எண்ணினால் , இக்கால மக்கள் சொல்லும் , செய்திடும் use and through என்பதுதான் நினைவில் வருகிறது ..
நிறையப் பகிர்ந்திட எண்ணுகிறேன் , இருப்பினும் Larry Collins and Dominique Lapierre எழுதிய  "நள்ளிரவில் சுதந்திரம் "  எனும் புத்தகம் இதைப்பற்றிய செய்திகள் நிறையத் தரும் .
என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு இந்தியனும் , ஏன் ஒவ்வொரு பாகிஸ்தானியும் படித்திட வேண்டிய புத்தகம் இது ..
இப்போதைக்கு இந்தப் பதிவினை முடிக்கிறேன்..
எண்ணங்கள் நீளும் ...

செம்மொழி வாழ்க

திருவான்மியூர் கடற்கரையிலிருந்து வரும் வழியில்  விளம்பர அட்டையில் கண்ட வாசகம்
" அடையாறு பூட்ஸ் காலணியகம்" ... வாழ்க தமிழ் ....

Friday, September 3, 2010

Afterall,its me

Really it looked like  strange ,when I started the blogging.


My friends especially juniors whom are blogging almost as professionals.

But when I compare my blog with them , it might looks like childish.

Anyway I started it, Need to go in a long way.

The days are rolling like anything,but I am not moving. When I decided to move,

I could able to move from the present room to the new one only.


I am still expecting someone to share my thoughts, sometimes I convert

them as arts.There are some beatiful sights I am enjoying during the

journeys to my college. Today is a really nice one as I have travelled in the

train and enjoyed the pleasant rainy chennai.


I always making my mindset as to see the things slowly when I am travelling in train,regardless of

the speed of the train or the works of my life. As it is there, I have already decided to feel the pleasants

of it ..

The life is looking like machinery at many times . But after a long thought I have decided to go slowly,

as I started to believe the time, regardless of one life or many, I can achieve the things at any time ,at

any phase, if its going to be achieved by me.

Whatever it is, I am surviving with just one principle , take life as it is....

Friday, August 27, 2010

நடை

மெல்ல நகரும்
முகில்கள் போலவே
என்னவளும் நடைபயில்கிறாள்
என் இதயத்தில்

நீ ..

அரசாங்கம்தான்
இலவச மின்சாரம்
தருகின்றதென்றால்
அடி நீயுமா ?!
உன் விழிப்பார்வையில் …….!

Wednesday, August 11, 2010

கனவு?


முன் பனிக்காலத்தில்
கவலையில்லாமல்
 குதித்து விளையாடிய
கணங்கள்
*சுடும் வெயிலில்
வியர்வை சிந்தி
வீதி  வலம் வந்த நாட்கள்
*மழைக்காலப் பொழுதுகளில்
நனைந்திட்டே நடந்த
என் பாதங்கள்
*சின்னத் திரை கொண்ட
வண்ணக் கணினியில்
சிறைப்பட்டிட்ட காரணத்தாலேயே
என் கண்கள் ஏங்குகின்றன
தொலைந்துபோன அந்த
கணங்கள் திரும்பி வராதா  என ?

இட மாற்றம்

ஒவ்வொரு நண்பன் பிரியும் பொழுதும் ,
என்னைச் சுற்றி கேட்கும்
என்னை மறந்து விடாதே
என ஒலிக்கும் குரல்கள் ……..
*பகிர்ந்து கொள்ள
எத்தனையோ நினைவுகள்
இருந்தாலும் ……
நம்மைப் பிரிக்கும் கால தேவன்  கரங்கள்
நீண்டிருக்கும் காரணத்தாலேயே ,…..
நினைத்து விடாதே என
என் செவியில் விழுகின்றன ……
* நினைக்கும் ஒவ்வொரு கணமும்
கண்களில் நீர்த்துளியைத் தருவதாலேயே
நினைப்பதைவிட மறப்பதையே விரும்புகிறேன்….

உறவுகள்

அருகில் இருந்தும்,
 தொடர்பு எல்லைக்கு வெளியே,
 நெருங்கிய தோழன் ….
 தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் ….

வரம்

கிடைக்கப் போகும்,
 ஒரு மூடி தேங்காய்க்காக ,
கடவுள் கூட,
காத்திருக்க வேண்டியிருக்கிறது …
வேண்டுதல் நிறைவேறும் வரை

விடுமுறை நாட்கள்

கல்லூரி வாழ்வின்
சோம்பலான காலம் ….
அலுவலக வாழ்வின்
வேகமான காலம்

நான்…

நானும் ஒரு கடற்பயணிதான்
தீவுகளாய்
வாழும் மனிதர்களை
நாடிச் செல்வதால்

அமைதி

போர்க்களங்கள் பல கண்டும்
புத்தி இன்னும் வரவில்லை ….
புதைகுழி என்றே தெரிந்தும் ,
காலடி வைக்கும் மனங்கள் …..
பறி போகப் போவது
பிறர் அமைதி மட்டுமல்ல ,
தன் அமைதியும் தான் ….
இருந்தும் போரை விரும்பும்
கோழை மனங்கள் ……
முழுதாய் அழிந்த பின்தான்
முன்னுரை எழுத முடியுமோ
அமைதிக்கு ….

Long Live America!!!!!!!!

எல்லோருக்கும் சுப்ரபாதத்துடன்
பொழுதுகள் தொடங்குகையில்….
எங்களுக்கோ சுப்ரபாதத்துடன்
பொழுதுகள் முடிகின்றன
வாழ்க அமெரிக்கா….

Friday, July 30, 2010

என் பயணங்கள்

நினைவுச் சின்னங்களாய்
புகைப்படங்கள் இல்லாமலே
என் வழிப்பயணங்கள்
தொடர்கின்றன ..
மனதில் அழியாச் சுவடுகளுடன் ….
என்றும் அன்புடன் ,
ம.சண்முகம்.

இயற்கை அன்னையே

எனதருமை அன்னை பூமியே ,

பிறந்த நாள் முதல் எனக்கு அடைக்கலம் கொடுத்தவள் நீ..சின்னக் குழந்தையாய் இருந்ததிலிருந்தே உன்னைச் சீண்டி விளையாடுவதில் அளவற்ற ஆனந்தம் எனக்கு ….என்னின் வாழ்க்கைக்காக என்னைச் சுற்றி இருந்த என் சகோதரர்களை அழித்தேன்.

வேட்டையாடி வாழத் தொடங்கிய போதே என்னுள் இருந்த மிருகம் வெளியில் இருந்த மிருகங்கள் அழிந்திட காரணமாகியது .

என் வசதிக்காக ,உன்மேல் வளர்ந்திருந்த மரங்களை மெல்லக் கொல்லத் தொடங்கினேன் .

எனக்கு அறிவு வளர உனக்கு அழிவு வளரத் துவங்கியது . நான் முன்னேற உன் நிதிகள் பலவற்றை அழித்தேன் .ஆம் சுற்றிப் படர்ந்திருந்த விலை மதிப்பில்லா உன் நிதியாக விளங்கும் மரங்களை அழிக்கத் தயங்கியதில்லை நான்.
சின்ன விளையாட்டென ஆரம்பித்த இந்த வலைப்பின்னல் கழுத்தைத் திருகி மூச்சுத் திணற ஆரம்பித்திருந்தாலும் இன்னும் என் விளையாட்டை நான் நிறுத்தவில்லை .
உன்னை அழிப்பது என் தேவைக்கென மனம் சமாதானம் கூற மௌனமாய்ப் புதைந்து போனது என் மனசாட்சி . புதிய கண்டுபிடிப்புகள் எனப் பலவற்றைச் செய்து என் உடல் சுறுசுறுப்புக்கு விடைகொடுத்து, மூளைக்கு மட்டுமே வேலை கொடுப்பதில் வல்லவனாக , எனக்கு நானே எல்லைகள் வகுத்துக் கொண்டேன் . அழகிய பூஞ்சோலையான உன்னைக் குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டேன் .

நவீன மயமாக்கலில் நான் வைத்திட்ட முதல் அடி ,உன் அழிவைத் துவக்கி வைக்கும் மரண அடியாக இருந்தது.
மெல்ல நான் சுவாசிக்கத் துவங்கிய கணங்களில் இருந்து உன் மூச்சுதிணறல் ஆரம்பமாகியது . பரவிய தொழிற்சாலைகள் என் பெருமையைப் பறைசாற்றினாலும் ,உன்னை மாசுபடுத்தி ,
என் வாழ்வின் மரணப் பாதையின் தொலைவைக் குறுகச் செய்கின்றன . உன் விளையாட்டுக்களான பூகம்பம் , சுனாமி போன்றவற்றால் உன் வலிமை எனக்குப் புரிந்தாலும் , உன்னைக் கைக்குள் அகப்படுத்த , உன்னை மிஞ்சிட என் விளையாட்டுக்களைத் தொடர்கிறேன் .

நிகழ்காலத்தை நிம்மதியாகக் கழித்தாலும் , கண்ணுக்குத் தெரியாத எதிர் காலத்தில் என் சந்ததிகள் படப்போகும் கஷ்டங்கள் என் முன்னால் தெரிவதால் , ஏனோ மெல்ல விழித்துக் கொண்டு உன்னை அழிக்கும் என் கரங்களைக் கட்டுப்படுத்த முயல்கிறேன்.

கற்களென நினைத்து இரவைக் கடத்திட வைரங்களை ஆற்றில் போட்ட அறியாமை கொண்ட மனிதனாய் நான் இருந்தாலும், விடியும் பொழுதில் கையில் கிடைத்திட்ட வைரங்களாய் எஞ்சி இருக்கும் உன் இயற்கை வளங்கள் என் கண் முன் தென்படுகின்றன .

ஆம் நண்பர்களே ,சில சமயம் செய்வது அறியாமலும் , பல சமயம் அறிந்தும் இந்த பூமியை நாம் பாழ்படுத்தி விட்டோம் . விலை மதிக்க முடியா வைரமாய் உள்ள நம் இயற்கை வளத்தை இனிமேலாவது பாதுகாக்க முயல்வோம் .


என்றும் அன்புடன் ,
ம.சண்முகம்.

Do you got mad?

This is the first question asked by my friends when I told about getting back to physics.Then other questions followed such as about economy, settling in life ,  dependability of parents and so on..I replied back as yes I got mad, but mad of physics for long time..Here comes the irony , it is a kind of mad, like loving a girl once you like her so much , forgetting all the things about her , including understanding of her..Yes it happened..
From my college days I told Physics as  my lover whom I don't understand much .I love Physics so much even without knowing the basics much..Its a kind of passion and patience I am having when it comes learning physics..


Whatever it is, there are many encouragements from the incurable minds(My juniors-Friends) to keep me to be mad..So I will say I am mad till my death...