எண்ணற்ற எண்ணங்கள் எப்போதும் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கக்கூடிய கணங்கள் அதிகம் . சில எண்ணங்கள் நம்மை விட்டுப் பிரிந்திடாதவையாக இருந்திடும் ..
என்னை அதிகம் பாதித்தது மகாத்மா காந்தியின் மரணமும் ,காமராஜரின் தோழ்வியும், ஜெயகாந்தனின் எழுத்துகளும் ..
நாடு பெற்றிட்ட சுதந்திர இன்பத்தை முழுதுமாய் அனுபவிப்பதற்குள் பிரிந்தது காந்தியின் உயிர் , நல்லாட்சி என்றால் என்னவென்று முழுதாய் அறிவதற்குள் வந்தமைந்தது காமராஜரின் தோழ்வி.
இவ்விரண்டு நிகழ்வுகளும் நிகழ்ந்த காலம் வேறாயினும் இவற்றால் இந்திய வரலாறே மாறிப்போயிற்று. தெரிந்த நிகழ்வுகளில் புதிதாய் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் நினைவுட்டாலே என் நோக்கம் .
சுதந்திர இந்தியா, இதை முழங்கிடுவதற்குள், பிரிந்த உயிர்கள் அதிகம் , இங்கிலாந்தை எதிர்த்தும் , இருந்திட்ட சகோதரர்களைக் கொன்றும் ...
இரண்டிலும் காந்தி தனிப்பங்கு வகித்தார்.. சுதந்திரத்திற்காகவும் , சகோதர உயிர்கள் பிரியக்கூடாதெனவும் பெரும் போராட்டம் நடத்தினார் .
ஆனால் எல்லாவற்றிற்கும் முடிவுரையாய் வந்தமைந்தது அவர் மரணம்.
சுதந்திரம் பெற்றிட தலைமை தாங்கியவரை , சுதந்திரம் பெரும் வேளையில், சில சுயநலனுக்காக மதியாமல் நடந்தது , இந்த தேசம் செய்த முதல் பாவம், செய்திட்ட பாவத்திற்கு தண்டனையென அனுபவிக்கும் வலிதான் இன்றைய மதக்கலவரங்களிலும் ,ஜாதிக்கலவரங்களிலும் பலியாகும் உயிர்கள் ..
அவர் பேச்சினைக் கேட்காமல் நடந்திட்ட நிலையை எண்ணினால் , இக்கால மக்கள் சொல்லும் , செய்திடும் use and through என்பதுதான் நினைவில் வருகிறது ..
நிறையப் பகிர்ந்திட எண்ணுகிறேன் , இருப்பினும் Larry Collins and Dominique Lapierre எழுதிய "நள்ளிரவில் சுதந்திரம் " எனும் புத்தகம் இதைப்பற்றிய செய்திகள் நிறையத் தரும் .
என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு இந்தியனும் , ஏன் ஒவ்வொரு பாகிஸ்தானியும் படித்திட வேண்டிய புத்தகம் இது ..
இப்போதைக்கு இந்தப் பதிவினை முடிக்கிறேன்..
எண்ணங்கள் நீளும் ...
No comments:
Post a Comment