திக்குகள் தெரியா பறவை சிறகுகள் விரித்து சிறியதொரு பறவை பறந்து கொண்டிருந்தது ..பரந்த வானில் சென்ற வழியை மறந்திருந்த கணமது. தெரிந்த வழிகள் அனைத்தும், சிந்தையில் ஓடியும், வழி தெரியாமல் தவித்த கணமது ... எதற்காக எனத் தெரியாத வாழ்வில் , எதற்காகவும் என்றில்லாமல் , தனக்கான பாதை போட்ட கணமது .. பரந்த கடலையும் சிறியதாய் உருமாற்றி,மனதை உறுதியாக்கி , சிந்தை தெளிவாகி , வாழ வழி காண கனவுகள் கொண்ட கணமது ..
மீண்டு பறக்கிறது இப்பறவை , சிறகுகள் இன்னும் நீளும்.......