Friday, June 3, 2011

கவிதை

மழைக்காலத்தில்
எப்போதவது
காய்ந்து விழும் இலையென ...
வந்து சேர்கிறது கவிதை ...
மரத்தைப் பிரிந்த ,
காயங்களைச் சுமந்த படி...

Friday, March 25, 2011

கடக்கும் காலம்

நாட்கள் நகர்ந்தன ..
நினைவுகள் சென்றன ..
பிரியும் முன்
இருந்த காலம் ,
திரும்ப வராதா என
கண்கள் ஏங்கின....
சொன்ன சொற்கள் ,
திரும்ப நினைக்கையில்
சொல்ல முடியாததொரு வலியோடு ...
கண்களில் இருந்த
 நீர்த்துளிகலனைத்தும்
கரைந்து போயிருந்தன ...

வண்ண மிகு வருங்காலமே
வருடங்களை விரைந்து
செல்லச்சொல்,
என் வலிகள் , மறக்கப்பட...

Friday, March 11, 2011

Tsunami

நீராலானதொரு      உலகம்  ,
போரால் அழிதல்
போதாதென 
நீரே தொடங்கிய 
அழித்தல் வேலைதான் 
சுனாமியோ 

Thursday, February 10, 2011

நூற்கொடை

இருந்தும் பயனில 
எனப்பட்டவையும் 
இருப்பவர்க்கெல்லாம் பயனாகட்டும் 
எனப்பட்டவையும் 
இரவலாய் வழங்கப்பட்டன 
புதிய நூலகத்திற்கு 

Monday, January 31, 2011

பயணம்

மௌனம் என்றொரு கூடு தேடி 
நித்தம் அலைகிறேன்,,,
சத்தமுள்ள வார்த்தைகள்
சுற்றி வந்து வழி மறித்தே
பாதை மாறி தூரம் போகிறேன் ...
என்று முடியும் என்றறியாப் பயணம் 



Saturday, January 29, 2011

கவியின் காலடியில்

காலத்தை மீறி நின்றான் ஒருவன்
அவன் காலடி பட்ட இடம் தேடி 
கண்டேன் ..
காண்பவர் யாருமில்லா  
கனவுக் கவிகளை ...
நெஞ்சம் கொதிக்கவில்லை 
சுட்ட அனலில் 
பட்டழிந்து போனது