Friday, August 27, 2010

நடை

மெல்ல நகரும்
முகில்கள் போலவே
என்னவளும் நடைபயில்கிறாள்
என் இதயத்தில்

நீ ..

அரசாங்கம்தான்
இலவச மின்சாரம்
தருகின்றதென்றால்
அடி நீயுமா ?!
உன் விழிப்பார்வையில் …….!

Wednesday, August 11, 2010

கனவு?


முன் பனிக்காலத்தில்
கவலையில்லாமல்
 குதித்து விளையாடிய
கணங்கள்
*சுடும் வெயிலில்
வியர்வை சிந்தி
வீதி  வலம் வந்த நாட்கள்
*மழைக்காலப் பொழுதுகளில்
நனைந்திட்டே நடந்த
என் பாதங்கள்
*சின்னத் திரை கொண்ட
வண்ணக் கணினியில்
சிறைப்பட்டிட்ட காரணத்தாலேயே
என் கண்கள் ஏங்குகின்றன
தொலைந்துபோன அந்த
கணங்கள் திரும்பி வராதா  என ?

இட மாற்றம்

ஒவ்வொரு நண்பன் பிரியும் பொழுதும் ,
என்னைச் சுற்றி கேட்கும்
என்னை மறந்து விடாதே
என ஒலிக்கும் குரல்கள் ……..
*பகிர்ந்து கொள்ள
எத்தனையோ நினைவுகள்
இருந்தாலும் ……
நம்மைப் பிரிக்கும் கால தேவன்  கரங்கள்
நீண்டிருக்கும் காரணத்தாலேயே ,…..
நினைத்து விடாதே என
என் செவியில் விழுகின்றன ……
* நினைக்கும் ஒவ்வொரு கணமும்
கண்களில் நீர்த்துளியைத் தருவதாலேயே
நினைப்பதைவிட மறப்பதையே விரும்புகிறேன்….

உறவுகள்

அருகில் இருந்தும்,
 தொடர்பு எல்லைக்கு வெளியே,
 நெருங்கிய தோழன் ….
 தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் ….

வரம்

கிடைக்கப் போகும்,
 ஒரு மூடி தேங்காய்க்காக ,
கடவுள் கூட,
காத்திருக்க வேண்டியிருக்கிறது …
வேண்டுதல் நிறைவேறும் வரை

விடுமுறை நாட்கள்

கல்லூரி வாழ்வின்
சோம்பலான காலம் ….
அலுவலக வாழ்வின்
வேகமான காலம்

நான்…

நானும் ஒரு கடற்பயணிதான்
தீவுகளாய்
வாழும் மனிதர்களை
நாடிச் செல்வதால்

அமைதி

போர்க்களங்கள் பல கண்டும்
புத்தி இன்னும் வரவில்லை ….
புதைகுழி என்றே தெரிந்தும் ,
காலடி வைக்கும் மனங்கள் …..
பறி போகப் போவது
பிறர் அமைதி மட்டுமல்ல ,
தன் அமைதியும் தான் ….
இருந்தும் போரை விரும்பும்
கோழை மனங்கள் ……
முழுதாய் அழிந்த பின்தான்
முன்னுரை எழுத முடியுமோ
அமைதிக்கு ….

Long Live America!!!!!!!!

எல்லோருக்கும் சுப்ரபாதத்துடன்
பொழுதுகள் தொடங்குகையில்….
எங்களுக்கோ சுப்ரபாதத்துடன்
பொழுதுகள் முடிகின்றன
வாழ்க அமெரிக்கா….