Thursday, June 21, 2012

தெரியாத பொழுது

எங்கு செல்கிறது வாழ்க்கை எனத் தெரியாத பொழுதில்
எங்கோ செல்லும் பறவை சொல்கிறது
ஓயாது பறந்தால் உன் இரையுள்ள  இடம்
இறையருளால் தெரியுமென ....

Monday, June 18, 2012

வானவில் நாட்கள்

நம்பிக்கைகள் தேடும் வாழ்வில் , தொலைத்த நினைவுகளையே பிடிப்பாய்க் கொண்டு செல்லும் நாட்கள் ...எனக்கான பாதை எங்கோ தெரிகிறது .. மெல்ல நடை பயில்கிறேன் ..

சென்ற நண்பர்களே, திரும்ப வாருங்கள் , இந்த வாழ்வில் மீண்டும் தேடல் தொடர்கிறது ..

திக்குகள் தெரியா பறவை

திக்குகள் தெரியா பறவை
சிறகுகள் விரித்து சிறியதொரு பறவை பறந்து கொண்டிருந்தது ..பரந்த வானில் சென்ற வழியை மறந்திருந்த கணமது.
தெரிந்த வழிகள் அனைத்தும், சிந்தையில் ஓடியும், வழி தெரியாமல் தவித்த கணமது ...
எதற்காக எனத் தெரியாத வாழ்வில் , எதற்காகவும் என்றில்லாமல் , தனக்கான  பாதை போட்ட கணமது ..
பரந்த கடலையும் சிறியதாய் உருமாற்றி,மனதை உறுதியாக்கி , சிந்தை தெளிவாகி , வாழ வழி காண கனவுகள் கொண்ட கணமது ..

மீண்டு பறக்கிறது இப்பறவை , சிறகுகள் இன்னும் நீளும்.......

Friday, June 3, 2011

கவிதை

மழைக்காலத்தில்
எப்போதவது
காய்ந்து விழும் இலையென ...
வந்து சேர்கிறது கவிதை ...
மரத்தைப் பிரிந்த ,
காயங்களைச் சுமந்த படி...

Friday, March 25, 2011

கடக்கும் காலம்

நாட்கள் நகர்ந்தன ..
நினைவுகள் சென்றன ..
பிரியும் முன்
இருந்த காலம் ,
திரும்ப வராதா என
கண்கள் ஏங்கின....
சொன்ன சொற்கள் ,
திரும்ப நினைக்கையில்
சொல்ல முடியாததொரு வலியோடு ...
கண்களில் இருந்த
 நீர்த்துளிகலனைத்தும்
கரைந்து போயிருந்தன ...

வண்ண மிகு வருங்காலமே
வருடங்களை விரைந்து
செல்லச்சொல்,
என் வலிகள் , மறக்கப்பட...

Friday, March 11, 2011

Tsunami

நீராலானதொரு      உலகம்  ,
போரால் அழிதல்
போதாதென 
நீரே தொடங்கிய 
அழித்தல் வேலைதான் 
சுனாமியோ 

Thursday, February 10, 2011

நூற்கொடை

இருந்தும் பயனில 
எனப்பட்டவையும் 
இருப்பவர்க்கெல்லாம் பயனாகட்டும் 
எனப்பட்டவையும் 
இரவலாய் வழங்கப்பட்டன 
புதிய நூலகத்திற்கு